A.R. Rahman - Puthiya Manidha lyrics

Published

0 224 0

A.R. Rahman - Puthiya Manidha lyrics

புதிய மனிதா பூமிக்கு வா புதிய மனிதா பூமிக்கு வா எக்கை வார்த்து சிலிக்கான் சேர்த்து வயரூட்டி உயிரூட்டி ஹார்ட் டிஸ்க்கில் நினைவூட்டி அழியாத உடலோடு வடியாத உயிரோடு ஆறாம் அறிவை அரைத்து ஊற்றி ஏழாம் அறிவை எழுப்பும் முயற்சி புதிய மனிதா பூமிக்கு வா புதிய மனிதா பூமிக்கு வா புதிய மனிதா பூமிக்கு வா மாற்றம் கொண்டு வா மனிதனை மேன்மை செய் உனது ஆற்றலால் உலகை மாற்று எல்லா உயிர்க்கும் நன்மையாயிரு எந்த நிலையிலும் உண்மையாயிரு எந்திரா எந்திரா எந்திரா என் எந்திரா எந்திரா எந்திரா எந்திரா என் எந்திரா நான் கண்டது ஆறறிவு நீ கொண்டது பேரறிவு நான் கற்றது ஆறுமொழி நீ பெற்றது நூறுமொழி ஈரல் கனையம் துன்பமில்லை இதயக்கோளாறேதுமில்லை தந்திர மனிதன் வாழ்வதில்லை எந்திரம் வீழ்வதில்லை கருவில் பிறந்த எல்லாம் மரிக்கும் அறிவில் பிறந்தது மரிப்பதே இல்லை இதோ என் எந்திரன் இவன் அமரன் இதோ என் எந்திரன் இவன் அமரன் நான் இன்னொரு நான்முகனே நீ என்பவன் என் மகனே ஆண் பெற்றவன் ஆண் மகனே ஆம் உன் பெயர் எந்திரனே புதிய மனிதா பூமிக்கு வா புதிய மனிதா பூமிக்கு வா புதிய மனிதா பூமிக்கு வா நான் என்பது அறிவு மொழி ஏன் என்பது எனது வழி வான் போன்றது எனது வெளி நான் நாளைய ஞான ஒளி நீ கொண்டது உடல் வடிவம் நான் கொண்டது பொருள் வடிவம் நீ கண்டது ஒரு பிறவி நான் காண்பது பல பிறவி ரோபோ ரோபோ பன்மொழிகள் கற்றாலும் என் தந்தை மொழி தமிழ் அல்லவா! ரோபோ ரோபோ பல கண்டம் வென்றாலும் என் கர்த்தாவுக்கு அடிமை அல்லவா! புதிய மனிதா பூமிக்கு வா புதிய மனிதா பூமிக்கு வா புதிய மனிதா பூமிக்கு வா புதிய மனிதா பூமிக்கு வா

You need to sign in for commenting.
No comments yet.